IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அம்மாவும் 40 திருடர்களும்! ஆனால் அம்மா இல்லை, திருடர்கள் தான் இருக்கிறார்கள் – சீமானின் சர்ச்சை பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் தற்போது மேடைகளில் பேசி பெயர் சம்பாதிப்பது போன்று தமிழக அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் பேசி வருகின்றனர். அதிமுகவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மிஞ்சும் வகையில் தற்போது நாம் கட்சி தலைவர் சீமான் மேடைகளில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியை கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரது மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

மேலும் சமீபத்தில் மலேசியா சென்றபோது விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் கட்டமைக்க சீமான் முயன்றதாகவும், அவருக்கு உதவியதாக கூறி ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 12 பேரை மலேசியா அரசு இன்று கைது செய்துள்ளது.
ராஜுவ் காந்தியை சுட்டுக் கொன்றது சரிதான் – சீமான் சர்ச்சை பேச்சு

இந்த பரபரப்பு தணிவதற்குள் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக அரணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராக சீமான் தூத்துக்குடி வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்பதைப் போன்று, அதிமுகவில் அம்மாவும் 40 திருடர்களும் என்பதைப் போல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் தற்போது அம்மா இல்லை, ஆனால் திருடர்கள் தான் இருக்கிறார்கள் என்றார். இந்த பேச்சு தற்போது ஆளும்கட்சி அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
#Seeman #ControversialSpeech #In4Net

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More