IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டிகள் மதுரையில் தொடக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

 

உலகெங்கும் 65 நாடுகளில் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாக கபடி உள்ளது. மாபெரும் கபடி போட்டி தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேஷன் உடன் இணைந்து மாநில அளவிலான 32 வருவாய் மாவட்டங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான 64 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கபடி போட்டி தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.

இதில் 4 மண்டலங்களில் ஜனவரியில் தொடங்கி அதனைத் தொடர்ந்து லீக் சுற்றுகளில் காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னையில் பிப்ரவரியில் பகலிரவு போட்டிகளாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள் விதம் 32 மாவட்டங்கள் சேர்த்து 384 ஆடவர்களும் மற்றும் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

முதல் மண்டல போட்டி மதுரை எம்ஜிஆர் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. மண்டலத்திற்கு உட்பட்ட ஆண்கள் அணி மதுரை (திண்டுக்கல் விருதுநகர் ராமநாதபுரம் தேனி தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி) களம் காண்கின்றனர்.

மதுரையில் இந்த எட்டு அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்றுகளில் அடிப்படையில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகள், சென்னையில் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற இருக்கும் மாபெரும் கபடி திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

#Tamilnadu #kabadi #match #start #madurai

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader