IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிவகங்கையில் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா

73

 

சிவகங்கையில் 6வது சரவதேச பலூன் திருவிழா தொடங்கியது. இதனை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

இளம் தலைமுறையினரிடையே விமான போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஏவியேஷன் கல்வி தொடர்பான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் குளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் சர்வதேச பலூன் திருவிழாக்களை நடத்தி வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே 5 ஆண்டுகள் இந்த பிரமாண்ட திருவிழா நடத்தப்பட்ட நிலையில் 6வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா முதன்முறையாக சிவகங்கையில் தொடங்கியது. சிவகங்கை மவுண்ட் லிட்ரா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது பிரமாண்ட பலுானில் வெப்பக்காற்றை நிரப்பி, வெளிப்புற காற்றழுத்தத்துக்கு ஏற்ப வானில் பறக்கவிடப்பட்டது. இதனை பொதுமக்களும், மாணவர்களும் வியப்புடன் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக 11ம்தேதி முதல் 15ம்தேதி வரை பொள்ளாச்சியில் 6வது எடிஷன் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் நாகர்கோயில் நெய்யூரில் மவுண்ட் லிட்ரா பள்ளியில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது. மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குட்டி விமானங்கள் மற்றும் டுரோன்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அவை எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. மேலும் விமான ஓட்டுநர் பயிற்சி, காகித விமான வடிவமைப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த பலூன் திருவிழா குறித்து குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத்தின் பெனடிக் சேவியோ கூறுகையில், இந்த வகை பலூன்கள் பாதுகாப்பானது என்பது உலகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்காக இந்த வகை பலூன்களை எல்லா நாடுகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். முற்றிலும் பருவநிலை மற்றும் காற்றின் தன்மையின் படியே பலூன்களை பறக்க விட முடியும். வெப்பக் காற்று மூலம் பறக்கும் இந்த பலூன் காற்றின் திசையில் செல்லக் கூடியது. தேவையான திசையில் இயக்க முடியாது. தேவையான இடத்தில் மேலே செல்லவும், கீழே இறக்கவும் வசதிகள் உள்ளன. பயிற்சி பெற்ற பைலட்டுக்கள் இதை இயக்குகின்றனர். இந்த பலூன் திருவிழா மூலம் தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி பெறும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பலூன்கள் வெகுவாக கவரும். என்றார்.

#Tamilnadu #International #Balloon #Festival #Sivaganga