IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனியார் மருத்துவமனையில் அனுமதி

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என சந்தேகத்தின் பேரில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான காவலர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கவர்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தீவிர கண்காணிப்பில் பன்வாரிலால் புரோகித் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக எந்தவிதமான தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader