IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மனசுக்கு சரின்னு பட்டத செய்ய முடியாத சூழ்நிலையில் முதல்வர் இருப்பதாக தகவல்!

Get real time updates directly on you device, subscribe now.

லாக் டவுனால என்ன பலன்கள் கிடைக்கும்னு நிபுணர்கள் சொன்னாங்களோ, அது கிடைக்கல. வருமானத்துக்கு வழி இல்லாம மக்கள் விரக்தி ஆயிட்டாங்க. அதனால, லாக் டவுன ரத்து செஞ்சிட்டு, மாஸ்க் போட்றது, இடைவெளி விட்றது மாதிரி மருத்துவ ரீதியான விதிகள மட்டும் ஸ்ட்ரிக்டா அமல் படுத்தினா போதும்’னு அவர் நம்புறார்.

அரசு என்ன செய்யலாம்னு ஆலோசனை சொல்றதுக்கு நியமிச்ச மருத்துவ நிபுணர் குழுவும் ’சீயெம் நினைக்றது சரிதான்’னு ஒத்துகிறாங்களாம்.

ஆனா, ‘நம்ம ஜனங்கள நம்பி கதவ தொறந்து விட்டா மொத்த தமிழ்நாடும் கோயம்பேடா மாறிடும். அதனால ஏற்பட கூடிய விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு..’னு உயர் அதிகாரிகள் ஏழெட்டு பேர் கோரசா சொல்றாங்களாம்.

அத கேட்டுட்டு ’நமக்கு எதுக்கு வம்பு..’னு மெடிக்கல் எக்ஸ்பர்ட்ஸ் ரிவர்ஸ்ல போறதாவும், வேற வழி இல்லாம சீயெம்மும் ஜகா வாங்றதாவும் சொல்லுது தகவல்.

இப்பலாம் தமிழ்நாடு மேட்டர்ல எதுனா க்ராஸ் செக் பண்ணனும்னா டெல்லிக்கு கால் போட வேண்டி இருக்கு. இந்த தகவல வெரிஃபை பண்ணலாம்னு அங்க விசாரிச்சா சோகமா சிரிக்கிறாங்க.

‘இங்கேயும் அதே கததான். ரஸ்க் தின்ற மாதிரி அசால்ட்டா ரிஸ்க் எடுக்றவரே ஆய்வு கூட்டம் முடியிறதுக்குள்ள கண்ண மூடி தியானத்ல போய்ட்றாரு. ஜனங்க உயிரோட விளையாடிட்டதா பழி வந்துர கூடாதுனு பயம்..’

யோசிக்காமலே செய்ற காரியம்தான் தப்பா முடியும்னு இல்ல. ரொம்ப யோசிச்சு செய்யாம விட்ற காரியமும் அப்டி முடியலாம்.

தகவல் : மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் முகநூல் பதிவு

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader