IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

போட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி கொண்டாடப்போகும் திமுக!

Get real time updates directly on you device, subscribe now.


தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து உண்மையிலேயே தமிழகத்திற்கு முதலீடுகளை திரட்டியிருந்தால் திமுக சார்பில் பாராட்டுவிழா நடத்துவோம் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் அரசுமுறைப் பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் சென்றார். அங்கு மருத்துவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்பு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தமிழகத்தில் தொழில் துவங்க 16 தொழில் நிறுவனங்கள் மற்றும் 3 ஐடி நிறுவனங்கள் முன்வந்தன. இதையடுத்து 2ஆயிரத்து 300கோடி ரூபாய் அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் பழனிச்சாமி கையெழுத்திட்டனர்.


சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் பழனிச்சாமி ஒரு விவசாயி, அவர் முதன் முதலில் கோட்சூட் அணிந்து செல்கிறார். முதல்வர் வெளிநாடு போகட்டும் அல்லது போகாமல் இருக்கட்டும். வெளிநாட்டு முதலீடுகள் நாட்டு மக்களுக்காகவா, அல்லது முதல்வருக்காகவா என தெரியல என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் நான் வெளிநாடு செல்வது அனைவருக்கும் தெரிவித்து வெளிப்படையாகத்தான் செல்கிறேன் என பதிலளித்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் உண்மையிலேயே மக்களுக்காக வெளிநாடு முதலீடுகளை கவர்ந்திருந்தால் கண்டிப்பாக திமுக சார்பில் பெரிய பாராட்டு விழாவே நடத்துவோம் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


தற்போது பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலினின் ஒரே ஹாட் பேச்சு என்னவென்றால் முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து தான் பேசிவருகிறார். எங்கு போனாலும் எதை பற்றிபேசினாலும் கடைசியில் முதல்வரின் வெளிநாடு பயணத்தை பற்றி விமர்சித்து வருகிறார்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More