தமிழக முதல்வர்கள் கொண்டு வந்த திட்டங்கள் !

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக கொண்டு வந்த சிறந்த திட்டங்களை பற்றி இந்த கட்டுரையில் நாம் காணலாம்.

விதவைத் திருமணம் செய்வோருக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் திட்டத்தை, அண்ணா தலைமையிலான தமிழக அரசு கொண்டு வந்தது.

காமராஜர்

 • காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.
 • அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
 • அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 • முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

அண்ணாத்துரை

 • நிதி நெருக்கடிக்கு இடையிலும், தனது தேர்தல் வாக்குறுதியான ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் கொண்டு வந்தார். இதனால், சுமார் 31 லட்சம் பேர் பயன்பெற்றனர்.
 • ஜமீன்தாரி முறை ஒழிப்பு திட்டத்தின் மூலம் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கபட்டன.
 • ஏழைகளுக்கு இலவச பள்ளிக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார்.
 • கல்வித்தரத்தை உயர்த்த பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புகளை தமிழகம் முழுவதும் உருவாக்க நடவடிக்கை எடுத்து, அதன்மூலம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
 • தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வீட்டுமனைகள், சிறு தொழில் துவக்க வட்டியில்லா கடன், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, கலப்பு திருமணம் செய்வோருக்கு தங்க விருது வழங்கும் திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.
 • விதவைத் திருமணம் செய்வோருக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் திட்டத்தை, அண்ணா தலைமையிலான தமிழக அரசு கொண்டு வந்தது.
 • பெண்கள் முன்னேற்றத்துக்காக, மகளிர் மன்றங்கள் மூலம் சிறு தொழில்கள், வேலைவாய்ப்பு, கல்வி உதவி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு பெரிதும் உதவுமாறு, தங்கும் விடுதிகளும் துவக்கப்பட்டன.

எம்.ஜி.ராமசந்திரன்

 • சத்துணவுத் திட்டம்
 • விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
 • தாலிக்கு தங்கம் வழங்குதல்
 • மகளிருக்கு சேவை நிலையங்கள்
 • பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
 • தாய் சேய் நல இல்லங்கள்
 • இலவச சீருடை வழங்குதல் திட்டம்
 • இலவச காலணி வழங்குதல் திட்டம்
 • இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
 • இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்
 • வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்

மு.கருணாநிதி

 • 108 ஆம்புலன்ஸ் சேவைகள் கருணாநிதியின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது.
 • 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது
 • கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது.
 •  தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது.

ஜெயலலிதா

அம்மா உணவகம்: வார இறுதிநாள்களில் உயர்தர ஹோட்டல்களுக்கு சென்று குடும்பத்துடன் விருந்து உண்ணும் வசதி படைத்தவர்கள் உள்ள இதே நாட்டில்தான், இன்றும் தினமும் மூன்று வேளை உணவு உண்ண முடியாத ஏழை, பாழைகளும் இருக்கின்றனர்.

இவர்களை போன்றோரை கருத்தில் கொண்டு, 2013 -இல்  தமது  பிறந்த நாளான பிப்ரவரி 24 -ஆம் தேதி,  அம்மா உணவகத்தை சென்னையில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சாதாரண மக்களும் வசதிபடைத்தவர்களுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில், கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, 2010-இல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது.

மழைநீர் சேகரிப்பு திட்டம்: சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக, கோடை காலத்தில் நகரங்களில் அங்கிங்கெனாதபடி எங்கும்  குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுவது வழக்கமாக உள்ளது.

சென்னை  மாநகரில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதத்தில், கடலூர்  மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் விநியோகிக்கும் வீராணம் கூட்டு குடிநீர் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

#cmot #jeyalalitha #MGR #annathurai #kamarajar #karunanidhi #in4net

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader