IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கைதிகள் சாவில் தமிழகத்துக்கு 2ம் இடம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

34

அகில இந்திய அளவில் போலீஸ் நிலையத்தில் வைத்து கைதிகள் இறப்பதில் தமிழகத்துக்கு 2ம் இடம் கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் விசாரணை கைதிகள் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வந்த தகவலையடுத்து, இது தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, அந்த ஆய்வில், போலீஸ் நிலையத்துக்கு விசாரணை கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் அதிகளவு இறந்தவர்கள் பட்டியலில் குஜராத் முதலிடமும், தமிழகம் 2வது இடமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் 13 பேரும், தமிழகத்தில் 12 பேரும் உயிரிழந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், போலீஸாரின் சித்ரவதை தாங்க முடியாமல் தான் கைதிகள் இறந்துள்ளதாகவும், நீதிமன்ற விசாரணையின் போதும் சிலர் இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சட்டம்-ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய ஆய்வில் தமிழகம் முதலிடம் பெற்று சாதனை படைத்த சமயத்தில், கைதிகள் இறப்பு பட்டியலில் 2ம் இடத்தை பெற்றிருப்பது சிறிது மன வருத்தத்தை அளிப்பதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

#Tamilnadu #2place #Prisoners #death