IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழிசைக்கு இவ்வளவு நல்ல மனசா ! திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

Get real time updates directly on you device, subscribe now.


கவர்னர் தமிழிசை சௌந்திரராஜனின் நல்ல மனதை பாராட்டி திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.


தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சௌந்திரராஜன் பொறுப்பில் உள்ளார். இவர் இதற்குமுன் தமிழக மாநில பாஜக தலைவராக பொறுப்பில் இருந்த போது கடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக களமிறங்கிய கனிமொழி சுமார் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசையை தோற்கடித்தார்.


இந்நிலையில் கனிமொழியின் வேட்புமனுவில் ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் தமிழிசை சௌந்திரராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தெலங்கானா கவர்னராக தமிழிசை சௌந்திரராஜன் பொறுப்பேற்று தெலுங்கு தேசம் சென்றார்.
மீம்ஸ் கிரியேட்டர்களை மரண கலாய் கலாய்த்த கவர்னர் தமிழசை


இதையடுத்து அவர் கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரனைக்கு வந்தது. விசாரணையில் இகு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் அரசு இதழில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் இதுகுறித்து தமிழிசையின் நற்குணம் குறித்து திமுக தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
#TamilisaiSoundarrajan #Withdraw #Petition #Kanimozhi #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader