IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

Get real time updates directly on you device, subscribe now.

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்? என்று மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் மாதம் போட்டி தேர்வுகான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தனர். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், கணினி தேர்வை முழுவதுமாக ஆங்கிலத்தில் நடத்தியது.

நிவாரண பொருட்களை திருடிய பள்ளி் ஆசிரியர்

தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என்று கூறிவிட்டு, முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தேர்வு நடத்தியதால் தேர்வுக்கு தயாராகி இருந்த பலரும் பாதிக்கப் பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் தேர்வு நடத்தியது சரியானது அல்ல என்று கூறியும், எனவே இந்த போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் மதுரை ஐகோர்டில் மதுரை தயானா, சென்னை குழந்தைவேல், ரோஹினி, விழுப்புரம் விஜயகுமார், ஞானவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தரப்பில் வக்கீல் தமிழன் பிரசன்னா ஆஜராகினார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, ஆசிரியர் தேர்வாணையத்திடம் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விகான பதிலை நாளை (வெள்ளிக்கிழமை)அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

# Highcourt #madurai #Teachers Recruitment Board

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader