IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆகஸ்ட் 2வது வாரம் தமிழகத்தில் பள்ளிகள் துவக்கப்படும்

Get real time updates directly on you device, subscribe now.

ஊரடங்கிற்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்றும் திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வறையிலான வகுப்புகளை ஆகஸ்ட் 2ம் வாரத்தில் துவக்கலாம் என்றும் அந்த வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader