IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இதுலயும் தமிழன்தான் பர்ஸ்ட்! காஷ்மீர் மக்களுக்காக முதல் போராட்டம் சென்னையில் தொடங்கியது!!

25


மாநிலங்களவையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்தார். இதனால் அவையில் பலத்த பாராட்டுகளும் எதிர்ப்புகளும் கிளம்பின.


ஆனால் காஷ்மீர் பிரிவிற்கு நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தமிழகத்தில் மட்டும் முதன்முறையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து தமிழகத்தில் இன்று காலை ஆளூநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது.


இரண்டாக பிரிக்கப்பட்ட காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் ஆதரவு உள்ள காஷ்மீரில் எந்தவிதமான போராட்டமும், கலவரமும் நடைபெறாத சூழ்நிலையில் அமைதியாக உள்ளன. ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் தொடங்கியுள்ளது.


இந்த நிகழ்வை பார்க்கும் போது மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் பாஜக-வை தமிழகம் எதிர்க்கும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.