IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜெயலலிதா நினைவு இல்லம் – நிலம் கையகப்படுத்த அரசு இழப்பீடு தொகை செலுத்த முடிவு

Get real time updates directly on you device, subscribe now.

முன்னாள் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா இல்லம்) நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது.

24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்த திட்டமிட்டுள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader