IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசணை

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக தனது வீட்டில் ஆலோசணை நடத்தி வருகிறார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது இல்லத்தில் இரண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசணை நடத்தி வருகிறார். இந்த ஆலோசணையில் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று, முதல்வர் துணை முதல்வர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. சென்னையில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியினர் முன்னிலையில் இருவரும் பகிரமாக மோதிக் கொண்டனர்.

கட்சியினரிடையே சமாதானப்படுத்த வேண்டிய இருவரும், நேரடியாக மோதிக் கொண்டதால் கட்சி வட்டாரம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இதனால் தற்காலிமாக இருவரையும் சமாதானப்படுத்திய மூத்த நிர்வாகிகள், இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டபின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 7- ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் முறையாக அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லம் முன்பு கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அப்போது நாளை தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு, வருங்கால அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ். என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader