கொரோனா தடுப்பு பணிகுறித்து ஜுலை 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா நோய்த் தொற்று தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜுலை 14ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

கடந்த நான்கு நாட்களாக சென்னையில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், மதுரை, சேலம், திருச்சி, தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கிராமங்களில் நோய்த் தொற்று அதிகமாவது குறித்து பலரும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் முன்னிட்டு இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு முடக்கத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிறு – ஜூலை 12) தமிழகம் முழுவதும் முழு முடக்கம் பின்பற்றப்படும்.

இந்நிலையில் வரும் செவ்வாய் கிழமை தமிழக அமைச்சரவையில் நடைபெற விருக்கும் அமைச்சரவை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பொதுப்போக்குவரத்துக்கான வரம்புகள் அகற்றப்படுவது, சென்னையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது, மற்ற மாவட்டங்களில் குறிப்பாக, நோய்த் தொற்றல் அதிகம் உள்ள இடங்களில் ஊரங்டகைக் கடுமையாக்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்பது, மருத்துவமனை வசதிகளை அதிகப்படுத்துதல், ஜூலை மாதத்திற்குப் பிறகும் ஊரடங்கைத் தொடர்வதா, கைவிடுவதா உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை இக்கூட்டத்தில் விவாதிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader