IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நாங்களும் போவோம்ல… – எடப்பாடியரைத் தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாட்டு பயணம்

2


முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்தைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெளிநாடுகளில் முதலீடுகளை கவர்வதற்காக லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, சி.செங்கோட்டையன் ஆகியோரும் உடன் சென்றனர்.


இந்த பயணத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதினங்களுக்கு முன் நாடு திரும்பிய முதல்வர் பழனிச்சாமி, தண்ணீர் சிக்கனம் குறித்து அறிய இஸ்ரேல் செல்ல விருப்பதாக தெரிவித்தார்.


முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி புது விளக்கம்!

இவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டுமான தொழில் குறித்து ஆய்வு செய்வதற்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சீனா அல்லது இந்தோனிசியாவிற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.


பிரதமரின் மோடியின் வெளிநாட்டு பயணத்தைத் தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் பயணம் பொதுமக்களுக்கு நன்மை அளிப்பதாக இருந்தால் ஆரோக்கியம்தான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
#OPanneerSelvam #ForeignTrip #Singapore #In4Net