IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்!

Get real time updates directly on you device, subscribe now.

உலகமெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் வகையில் ”தமிழ் கிரியேட்டர்ஸ் க்ளப்” தொடக்க விழா மதுரையில் நடைபெற்றது. பிரபல சினிமா இயக்குனர் எஸ்.பி.எஸ்.குகன் ”தமிழ் கிரியேட்டர்ஸ் க்ளப்”பை தொடங்கி வைத்தார்.

உறுப்பினராக பதிவு செய்து கொள்ள : https://forms.gle/mi5MGGLXLKyZKjdBA

FB Page : https://facebook.com/tamilcreatorsclub

தமிழ் இனி மெல்ல சாகுமோ ? என்ற ஐயத்தை பொய்யாக்க, LCD (LANGUAGE CONTENT DEFICIT தமிழ் மக்கள் தொகை மற்றும் இணையத்தில் ஐந்து மடங்கு குறைவாக உள்ள தமிழ் தகவல்களுக்கான விகித இடைவெளியை போக்க, தமிழில் படைப்பாளிகளை இணைத்து ஒலி, ஒளி மற்றும் உரைமுறைகளில் அதிகபட்ச படைப்புகளை உருவாக்க, இதன் மூலம் இணையத்தில் தேடும் அனைத்திற்கும் தமிழில் விடைகான, மொத்தத்தில் இணையத்தில் தமிழை வளர்க்க ஆகிய நோக்கங்களுக்காக “தமிழ் படைப்பாளர்கள் குழு (TAMIL CREATORS CLUB) தொடங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுமிருந்து தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இணையலாம். இந்த குழு மூலம் ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இணைய மூலமும், நேரிலும் கருத்தரங்கமும் அதை தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிந்ததை பகிர்ந்தும் தெரியாததை கற்றுக்கொண்டும் பயன்பெற கலந்துரையாடலும் நடைபெறும்.

சினிமா, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் நுழையவும், சாதிக்கவும், சம்பாதிக்கவும், புகழ் பெறவும், ஆர்வமும் திறமையும் மிக்கவர்கள் பங்கேற்பதன் மூலம் கற்றுக்கொண்டு சேர்ந்து வளரலாம் என்ற தத்துவத்தில் “தமிழ் படைப்பாளர்கள் குழு (TAMIL CREATORS CLUB)” இயங்கவிருப்பதாக குழுவின் நிறுவனர் ஜே.கே.முத்து தெரிவித்துள்ளார். குழுவின் தொடக்க விழா மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, முயல் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் எஸ்பிஎஸ் குகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழுவின் இலட்சினையை அறிமுகப்படுத்தி வைத்தார். விழாவில் தமிழ் படைப்பாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சமுத்ரா செந்தில், இணை ஒருங்கிணைப்பாளர் மாமதுரை கவிஞர் ஜோவி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் சி3 மீடியா காசிராஜன், முகில் டிவி பரிதி இளங்கோவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த தமிழ் படைப்பாளர்கள் குழுவில் உறுப்பினராக இணைய கட்டணம் ஏதும் இல்லை. குழுவில் இணைய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை https://forms.gle/mi5MGGLXLKyZKjdBA என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளித்து குழுவில் இணைவதன் மூலம் இணையத்தில் தமிழ் வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கான இலக்கினை அடையவும் தமிழ் கிரியேட்டர்ஸ் கிளப் உதவி புரியும்.

தமிழ் படைப்பாளர்கள் குழு டெலிகிராமில் இணைய: https://t.me/tamilcreatorsclub
வாட்ஸ்அப்பில் இணைய https://chat.whatsapp.com/Jtfe0LkQr8G3vin3HDDMd3
உறுப்பினராக பதிவு செய்து கொள்ள : https://forms.gle/mi5MGGLXLKyZKjdBA

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader