மதுரையில் தமிழ் படைப்பாளர்கள் குழுவின் முதல் கூடுகை

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் தமிழ் படைப்பாளர்கள் குழுவின் முதல் கூடுகை நிகழ்வு 24-10-2020 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் உள்பட 25க்கும் அதிகமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தமிழ் இனி மெல்ல சாகுமோ ? என்ற ஐயத்தை பொய்யாக்கவும், LCD (LANGUAGE CONTENT DEFICIT தமிழ் மக்கள் தொகை மற்றும் இணையத்தில் ஐந்து மடங்கு குறைவாக உள்ள தமிழ் தகவல்களுக்கான விகித இடைவெளியை போக்கவும், தமிழில் படைப்பாளிகளை இணைத்து ஒலி, ஒளி மற்றும் உரைமுறைகளில் அதிகபட்ச படைப்புகளை உருவாக்கவும், அதன் மூலம் இணையத்தில் தேடும் அனைத்திற்கும் தமிழில் விடைகாணவும்,மொத்தத்தில் இணையத்தில் தமிழை வளர்க்கும் நோக்கத்தில் தமிழ் படைப்பாளர்கள் குழு மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் முதல் கூடுகை மதுரை அண்ணா நகரில் உள்ள கமலம் குழும வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் உள்பட 25க்கும் அதிகமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இரா.ரவி எழுதிய உதிராப் பூக்கள் மற்றும் கல்லூரி மாணவர் கா.வெற்றிவேல் பாரதி எழுதிய முட்டாளின் கவிதைகள் ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. முன்னதாக கூட்டத்திற்கு வந்தவர்களை தமிழ் படைப்பாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சமுத்ரா செந்தில் வரவேற்றுப் பேசினார்.

தமிழ் படைப்பாளர்கள் குழுவி நோக்கம், இலக்கு, செயல்பாடுகள் குறித்து குழுவின் நிறுவனர் ஜே.கே.முத்து விளக்கிப் பேசினார். அவர் பேசுகையில், உலகம் முழுவதுமிருந்து தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த குழுவில் உறுப்பினராக இணையலாம். இந்த குழு மூலம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இணைய கருத்தரங்கமும் அதை தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிந்ததை பகிர்ந்தும் தெரியாததை கற்றுக்கொண்டும் பயன்பெற கலந்துரையாடலும் நடைபெறும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை ஒருமணி நேர கூடுகையாக படைப்பாளர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி எங்களது கமலம் குழும வளாகத்தில் நடைபெறும். மீடியா துறையில் சாதிக்கவும், சம்பாதிக்கவும், புகழ் பெறவும், ஆர்வமும் திறமையும் மிக்கவர்கள் பங்கேற்பதன் மூலம் கற்றுக்கொண்டு சேர்ந்து வளரலாம் என்ற தத்துவத்தில் துவங்கும் “தமிழ் படைப்பாளர்கள் குழு (TAMIL CREATORS CLUB)” – ல் உறுப்பினராக இணைந்தும், கருத்தரங்கில் பங்கேற்றும் பயன்பெறலாம், என்றார்.

சினிமா இயக்குனரும், மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரருமான எஸ்.பி.எஸ்.குகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், இணையத்தில் தமிழ் வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த குழுவில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி. தமிழ் படைப்பாளர்களுக்கு கேமரா, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பாக எழும் சந்தேகங்களை தீர்த்து வைக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். யுடியூப்பில் பதிவிடும் தமிழ் வீடியோக்களுக்கான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்வதற்கு மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி தயார், என்றார்.

கூட்டத்திற்கு அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஹென்றி ஜூலியஸ் முன்னிலை வகித்தார். மதுரைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சா.தனசாமி ஆசியுரையாற்றினார். எழுத்தாளர்கள் இரா.ரவி, துளிர், ரேவதி அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி முடிவில் முகில் டிவி வர்த்தக தலைமை அதிகாரி தே.வேணுகோபால் நன்றி கூறினார். மதுரை பேசிங்கர் கார்டன்ஸ் மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ் படைப்பாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சமுத்ரா செந்தில், இணை ஒருங்கிணைப்பாளர்கள் மாமதுரை கவிஞர் ஜோவி, சி3 மீடியா காசிராஜன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

தமிழ் படைப்பாளர்கள் குழு குறித்து மேலும் தகவல்களை அறிய 9500925917 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் படைப்பாளார்கள் குழுவின் டெலிகிராம் சேனலில் இணைய : https://t.me/tamilcreatorsclub வாட்ஸ்அப் குழுவில் சேனலில் இணைய https://chat.whatsapp.com/Jtfe0LkQr8G3vin3HDDMd3

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader