IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜேபி நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்

Get real time updates directly on you device, subscribe now.


பாஜகவின் செயல் தவைர் ஜேபி நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நடிகர் ராதாரவி கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி, நடிகை நயன்தாராவைப் பற்றி பேசினார். அதில் அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது.

அவர் பேசியதாவது, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டூ விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டிருந்தால் எந்த பிரச்சனையும் எழாது என்று பேசினார். இந்த கருத்து சினிமா துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பின்பு திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பிறகு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதை அதிமுக அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் பாஜக செயல்தலைவர் ஜேபி நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார். அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தகர். அவர்களுடன் சேர்ந்து நடிகர் ராதாரவியும் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ராதாரவி, தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
#BJP #Join #Radharavi #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader