IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

யாருக்கும் பொறுப்பு வழங்காதது ஏன்? தெளிவாக காய் நகர்த்தும் முதல்வர் பழனிச்சாமி!!

4

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 10 நாள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். நாளை (28ம்தேதி) சென்னையில் இருந்து புறப்படும் அவர், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் செல்கிறார். அங்கு மருத்துவர்கள் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை குறித்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார். மேலும் அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். முதல்வருடன் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ஆர்பி உதயக்குமார், ஆகியோரும் செல்கிறார்கள்.


இங்கிலாந்தில் இருந்து செப்டம்பர் 1ம்தேதி அன்று அமெரிக்கா புறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நியூயார்க் நகருக்கு செப்டம்பர் 2ம்தேதி சென்றடைகிறார். அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கிறார். அத்துடன் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளது.


அமெரிக்காவில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி புறப்படும் முதல்வர் துபாய் சென்று அங்கு செப்டம்பர் 8 மற்றும் 9ம்தேதிகளில் தொழில் முனைவோரை சந்திக்கும் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து 10ம்தேதி தமிழ்நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிச்சாமி. முதல்வரின் பயணத்திட்டம் அதிகாரப்பூர்வமாக அரசு சார்பி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பயணத்தின்போது பல்வேறு முக்கிய நபர்களையும், தொழில் முதலீட்டாளர்களை முதல்வர் சந்திக்க இருப்பதாகவும், தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தகள் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டை ஈர்ப்பதே முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், முதல்வர் வெளிநாடு செல்லும் 10 நாட்களில் தனது முதல்வர் பொறுப்பை அமைச்சர்கள் எவரிடமாவது ஒப்படைத்து விட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படுமா? அல்லது வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படுமா? என்று அரசியல் நோக்கர்கள் கவனித்து வந்தனர். ஆனால் முதல்வரின் பொறுப்பு எவரிடமும் ஒப்படைக்கப் படவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது முதல் இன்று வரை தெளிவாக காய் நகர்த்தி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதேப்போல இப்போதும் தெளிவாக எவருக்கும் பொறுப்பை வழங்காமல் வெளிநாடு செல்கிறார் என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியொன்றில், முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெறும். தமிழகத்திற்கு முதலீடுகள் நிறைய வந்து சேரும். இதனால் தமிழகம் பொருளாதாரத்தில் ஏற்றம் அடையும். வேலைவாய்ப்புகள் நிறைய உருவாகும். முதல்வருடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் செல்கிறார்கள். முதல்வர் வெளிநாடு செல்வதால் தனது பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அதனால் அவர் பொறுப்புக்களை எவரிடமும் ஒப்படைக்கவில்லை, என்றார்.