IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை மின்னல் தாக்கியது உண்மைதானா..?

Get real time updates directly on you device, subscribe now.

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக எழுப்பிய நினைவுச் சின்னம் ஆகும். இது சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தாஜ்மஹாலின் வடக்குப்பகுதி நுழைவுவாயிலில் உள்ள பளிங்கு கற்களால் ஆன மேற்கூரை இடி விழுந்ததில் சேதமடைந்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் நிற்கும் பகுதியில் உள்ள மேற்கூரை ஆகியவையும் சேதமடைந்துள்ளன. ஆனால் பிரதான கட்டடத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனை இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் உறுதிப் படுத்தி இருக்கிறார். தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை ஒட்டி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் தாஜ்மஹாலின் சேதமடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடங்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader