IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கீழப்பாவூர் 16 திருக்கர அபூர்வஸ்ரீ நரசிஸிம்ஹர் கோயிலில் சுவாதி பூஜை

154

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள 16 திருக்கர அபூர்வ ஸ்ரீநரஸிம்ஹர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.

தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூரில், 1100 ஆண்டு பழமைவாய்ந்த 16 திருக்கரங்களுடன் காட்சியளிக்கும் அபூர்வ ஸ்ரீநரஸிம்ஹர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் நரசிம்மருடைய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தை மாதத்திற்கான சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.

Related Posts
1 of 2

இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஸ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அபிசேகமும், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சுவாதி நட்சத்திரம்தோறும் தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு வந்தால் ருண விமோசனம் எனப்படும் கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். மேலும் ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் பில்லி, சூனியம், ஏவல், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகமாகும். எனவே தொடர்ந்து சுவாதி நட்சத்திர பூஜையில் கலந்து கொண்டு பயன்பெறும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுவாதி நட்சத்திர பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.