10.1 C
Munich
Monday, October 3, 2022

வித்தியாசமாகவும் விசித்திர குணம் கொண்ட எறும்புண்ணி பற்றிய ஆச்சரிய தகவல்கள்

Must read

பார்க்க வித்தியாசமாக காணப்படும் எறும்புண்ணி உயிரினங்கள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபால் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தட்ப வெப்பநிலைகளில் தான் அதிகம் காணப்படுகின்றன. எறும்புண்ணிகளில் மொத்தம் 8 வகைகள் உள்ளன.

 

எறும்புண்ணியின் உடலமைப்பு வால் பகுதி தடிமனாகவும் மற்றும் வாய் பகுதி மெல்லியதாகவும் காணப்படும். நடுவில் எறும்புண்ணியின் உடலமைப்பு உருளையாக காணப்படும். எறும்புண்ணிகள் சாதாரணமாக 30 செ.மீ முதல் 100 செ.மீ வரை வளரக்கூடியவை.

 

எறும்புண்ணிகள் மலை பிரதேசம் மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தான் அதிகமாக காணப்படும். தமிழ்நாட்டில் கல்வராயன் காடுகளில் அதிகமாக வாழ்கின்றன. இது சின்னசின்ன எறும்புகள், கரையான்கள் மற்றும் குட்டி பூச்சிகள் இவற்றை உண்டு வாழ்கின்றன.

 

எறும்புண்ணிகள் சராசரியாக 30 வயது வரை வாழக்கூடியவை. எறும்புண்ணிகள் மனிதர்களை பார்த்தால் பயந்து ஓடக்கூடியவை. அப்படியே எறும்புண்ணிகளிடம் மனிதர்கள் நெருங்கினால் தன்னைத் தானே ஒரு பந்து போன்று சுருட்டிக் கொள்ளும்.

 

எறும்புண்ணிகளில் அதிகமாக காணப்படுபவை, போர் வீரர்களைப் போன்று உடல் முழுவதும் செதில்களால் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் எறும்புண்ணிகள் தான் அதிகம் காணப்படும். இந்த வகை எறும்புண்ணிகளை மற்ற உயரினங்கள் தாக்கவரும் போது தன்னை ஒரு பந்து போன்று உருட்டிக் கொண்டு அங்கிருந்து உருண்டு ஓடிவிடும்.

 

பெரும்பாலான எறும்புண்ணிகளுக்கு ஒரு குணாதிசியம் உண்டு. அது என்னவென்றால் ஏதேனும் ஒரு உயிரினம் தன்னை சாப்பிட வந்தால் எறும்புண்ணியின் ஆசான வாயிலிருந்து ஒரு வகையான வாசத்தை தெளித்துவிடும். அந்த வாசனையை கண்டு அனைத்து மிருகங்களும் கிட்ட நெருங்காமல் தெரிந்து ஓடிவிடும். ஏனெனினல் அது ஒரு கெட்ட வாசத்தை வெளிப்படுத்தும்.

 

சின்ன சின்ன பூச்சிகள் மற்றும் எறும்புகளை உண்டாலும் எறும்புண்ணிகளுக்கு பற்கள் கிடையாது. அதனோட நீளமான வாய் மூலம் தனது இரையை உறிஞ்சி உள்ளே தள்ளிவிடும். அதுமட்டுமின்றி நிலத்திற்குள்ளே 11 அடி வரை ஓட்டை போட்டுகொண்டு அதற்குள் தான் எறும்புண்ணிகள் வாழும்.

 

எறும்புண்ணிகளுக்கு பார்வைத்திறன் குறைவு தான். இருப்பினும் மோப்ப சக்தி அதிகம். பூமிக்கடியில் 3 முதல் 5 அடி வரை ஆழத்தில் உள்ள தனது உணவை மோர்ந்து கொண்டு அல்லது அந்த உயிரினத்தில் சத்தத்தை காதால் கேட்டு பூமிக்கடியில் சென்று தனது இரையை சாப்பிடும்.

 

எறும்புண்ணிகள் எப்போதும் தனியாகவே இருப்பதைத்தான் விரும்பும். இவை தனிமை விரும்பிகள். ஆனால் கோடை காலத்தில் மட்டும் தன்னோட ஜோடிகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என விரும்பும்.


எறும்புண்ணிகள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 7 கோடிகள பூச்சிகளை உண்ணும். இது இயற்கைக்கு மிகவும் நல்லது செய்கிறது. உதாரணமாக 100 எறும்புண்ணிகள் இல்லாவிடில் 800 கோடி பூச்சிகள் அதிகரித்து இயற்கை வளத்தை அழித்துவிடும். இன்றைய காலத்தில் எறும்புண்ணிகளின் செதில்கள் மற்றும் தோல்களுக்காக ஒரு வருடத்தில் 25 லட்சம் எறும்புண்ணிகள் வரை வேட்டையாடப்படுகின்றன என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கையை பாதுகாப்படுமெனில் எறும்புண்ணிகளையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article