IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தது!

Get real time updates directly on you device, subscribe now.


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிதியமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற்று தரப்படடது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.

ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் சிதம்பரத்தால் வெளிவர முடியவில்லை. உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறியும் ஜாமீன் வழங்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து வந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் நாடினார். அங்கு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் என்ன தவறு என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் நிபந்தனையின் பேரில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வெளியே வரும் சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. மேலும் சாட்சிகளை மிரட்டவோ கலைக்கவோ கூடாது. பாஸ்போர்ட்டை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. வெளிநாடு செல்லக் கூடாது.

விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பிணைத் தொகையாக ரூ.2 லட்சம் பணம் செலுத்த வேண்டும். இதனுடன் இரண்டு பேரின் உத்திரவாதமும் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
#INX #MediaCase #India #Delhi #PChidambaram #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader