IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என அறிமுகமான அண்ணாமலை

Get real time updates directly on you device, subscribe now.

  அண்ணாமலை டைட்டில் கார்டில்

சூப்பர் ஸ்டார் ரஜினி:-

டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயருக்கு முன்னால் லோகோ இடம்பெற்ற முதல் தமிழ் படம் அண்ணாமலை. தேவாவின் மிரட்டலான இசையோடு, அந்த டைட்டில் அறிமுகமான போது, தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளந்தது! பாடலுடன், கதாநாயகன் அறிமுகமாகும் வழக்கமும் இப்படத்தில் தான் அறிமுகமானது. கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின் இயக்குனராக உயர்ந்தோர், வசந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா.

பாலசந்தர் தயாரிப்பில், அண்ணாமலை படத்தை, வசந்த் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு மூன்று நாட்களே இருக்கும் நிலையில், அவர் விலகினார். உடனடியாக, சுரேஷ் கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இவர் சாதனையாக்கினார்.

அப்பாவியான பால்காரன், செம ஸ்டைலான பணக்காரன் என, இரண்டு வித கதாபாத்திரங்களில், ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்படம் முழுக்க முழுக்க, ரஜினியிஷம் தான். தொடைத் தட்டி, சவால் விடும் காட்சியும், தொழிலதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, இருக்கை அமரும் காட்சியும், ரஜினி எப்படிப்பட்ட மாஸ் ஹீரோ என்பதை புரிய வைக்கும்.

கூட்டிக்கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும் என வில்லன் ராதாரவியும், பஞ்ச் வசனம் பேசி, அதகளப்படுத்தினார். குடும்ப சென்டிமென்ட், சரத்பாபுவுடன் நட்பு, குஷ்புவுடன் காதல், ஜனகராஜ் உடன் காமெடி, ராதாரவி மற்றும் நிழல்கள் ரவியின் அமைதியான வில்லத்தனம் என படம், பக்கா மாஸ் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

தேவாவின் இசையில் வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை, ஒரு பெண் புறா, வெற்றி நிச்சயம், ரெக்கை கட்டி, கொண்டையில் தாழம்பூ… என, அனைத்து பாடல்களும் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. அண்ணாமலை படத்தில் ரசிகரின் விசில் சத்தம் விண்ணை பிளந்தது.

#rajikanth #superstar #firsttitlecard #annamalaimovie  #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader