IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சுஜித் மரணத்தில் தொடரும் சந்தேகங்கள் ? தீர்த்து வைக்குமா அரசாங்கம் !

0 202

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை சுஜித் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டான். கடந்த அக்டோபர் 25ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை அக்டோபர் 29ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டன.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் முதலில் 27 அடி ஆழத்தில் இருக்கும் போதே உரிய உபகரணங்கள் இன்றி மேலே தூக்குவதற்கு வழிவகைகள் செய்ய காலதாமதித்ததால் 85 அடி ஆழத்திற்கு சிறுவன் படிப்படியாக கீழே இறங்கி உயிர் பிரிந்துள்ளன. இவனது இறப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் எழுந்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி இரவு 11.30 வரை சுஜித்தை மீட்கும் மீட்புபணி குறித்து தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளதாகவும் அப்போது 55 அடிவரை தோண்டியிருப்பதாகவும், இன்னும் 35 அடி தோண்ட 12 மணி நேரம் வரை ஆகலாம் என்பதும் செய்தியாக இருந்தது. அந்த 55 அடியை தோண்ட 4 நாள் ஆனது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதைவிட, 100 அடி தோண்டுவதை காட்டிலும் சவாலான காரியம் எந்த உபகரணமும் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை நெருங்குவது என்பதே முக்கிய செய்தியாக இருந்தது.

60 அடி ஆழம் தோண்டிய போது தீயணைப்பு வீரர் ஒருவர் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் இறங்கி பாறையின் தன்மையை அறிந்து கொள்ள கீழே சென்று ஒரு பாறையின் துகளை எடுத்து வந்தார். பிறகு பாறையின் தன்மையை கொண்டு மீட்பு பணிகள் தொடருவதாக அறிவித்தனர். பின்பு ரிக் இயந்திரம் மூலம் ஒரு மணிநேரத்தில் 10 அடி தோண்டும் திறன்வாய்ந்த இயந்திரங்கள் மூலம் பணி வேகமாக நடைபெறுவதாக அறிவித்தனர்.

ஆனால் திடீரென்று இரவு 11.30 மணிக்கு எல்லா சேனல்களிலும் லைவ் செய்வது நிறுத்தப்படுகிறது. இரவு 2.30 மணிக்கு துர்நாற்றம் வருவதாக வந்த செய்தி சேனல்கள், விடிகாலை 4.30க்கு குழந்தை உயிரற்ற உடலாக மீட்கப்பட்டது என ஒரு ப்ளாஸ்ட்டிக் பை காண்பிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இப்போது எழும் சந்தேகங்கள் என்னவென்றால்,

  1. தொடர்ந்து நேரலையாக காண்பிக்கப்பட்ட மீட்கும் பணி வீடியோ திடீரென லைவ் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது ஏன்?
  2. நான்கு நட்களாக 60 அடியே தோண்ட முடிந்த நிலையில் , அடுத்த 3 மணி நேரத்தில் முழுவதும் தோண்டியது எப்படி??
  3. பக்கவாட்டில் துளையிடுவது சவாலான காரியம் அவ்ளோ லேசுல முடியாது என்று அறிவித்த நிலையில், அதுவும் உடனே சாத்தியமானது எப்படி??
  4. 100 அடிக்கு கீழ் தீயணைப்பு வீரர்களை இறக்கி அவர்களுக்கு எதாவது ஆபத்துன்னா அரசாங்கத்துக்கு இன்னும் கெட்ட பெயர் உண்டாயிடும் என்பதாலும்.., குழந்தையை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் மாநில அரசுக்கு மேலும் அவப்பெயர் வந்திடும் என்பதாலும்.., அரசாங்கத்தின் கையாலாகாததனத்தை மறைக்க வெறும் ப்ளாஸ்ட்டிக் பையை வைத்து ட்ராமா நடத்தப்பட்டதா..??
  5. அப்படியே நீங்க சொல்வது அடுத்த 4 மணி நேரத்தில் எல்லாம் செய்து விட்டோம் என்பது உண்மை என்றால்…, அதற்கு முந்திய நான்கு நாட்கள் இந்த நான்கு மணி நேர சாதனையை ஏன் செய்யவில்லை..?? யாருக்காக என்ன நோக்கத்துக்காக அது தாமதப்படுத்தப்பட்டது..???

2வயது குழந்தை சுஜித்தின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தங்களது கேள்விகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதுசம்பந்தமாக அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தான் சுஜித் உண்மையான மரணம் குறித்தும் உண்மையில் உடல் கிடைத்ததா என்பதை தெரிவிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SujithRIP #SujithWilson