IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாடம் புகட்டிய சிறுவன் சுஜித் – கவர்னர் தமிழிசை

0 74

சுஜித் என்ற 2வயது பிஞ்சு குழந்தை துடிதுடித்த மரணம், பல பேரிடமிருந்து கற்ற பாடங்களை விட இறந்து நமக்கு பாடங்களை போதித்து சென்றுள்ளான் என தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 2வயது சுஜித் என்ற குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்று கொடுத்திருக்கிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

இந்த மரணம் சாதாரண மரணம் அல்ல. 80 அடிக்கு மேல் பள்ளத்தில் இருட்டில் சிக்கிக் கொண்டு துடிதுடித்த மரணம். பலபேர் இருந்து போதித்த பாடங்களை விட, சுஜித் இறந்து பலபேருக்கு பாடங்களை போதித்து சென்றிருக்கிறான். குழந்தையை மீட்க பல முயற்சிகள் செய்திருந்தாலும் உயிரோடு மீட்காதது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

போதும், ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த கடைசி உயிர் சுஜித்தாக இருக்க வேண்டும். மீண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக தலைவராக இருக்கும் போது பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறிவந்த தமிழிசை, தற்போது சமுதாய அக்கறையுடன் அரசியல் கலப்பிடமில்லாத கருத்தை தெரிவித்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.