IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கள்ளக்காதலி கொலை வழக்கில் தண்டனைக்கு பயந்து வாலிபர் தற்கொலை!

2

கள்ளக்காதலி கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற பயத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாகராஜன் நகரை சேர்ந்தவர் சிராஜ்தீன் (வயது 35). மீன்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நடந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கரூர் அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின் ரெகானா (வயது 25).


சிராஜ்தீனுக்கும் , ஜாஸ்மின் ரெகானாவிற்கும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளனர். அந்த சமயத்தில் ராஜாமுகமது வெளிநாட்டில் இருந்து மனைவி ஜாஸ்மின் ரெகானாக்கு நகை, பணம் அனுப்பியுள்ளார்.


அந்த பணம் மற்றும் நகையை ஜாஸ்மின் ரெகானா, தனது கள்ளக்காதலன் சிராஜ்தீன் செலவழித்திருக்கிறார். இந்நிலையில் ராஜாமுகமது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரவிருப்பதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஜாஸ்மின் ரெகானா, சிராஜ்தீனிடம் தான் கொடுத்த பணம், நகைகளை திருப்பிக் கேட்டுள்ளார். இந்த பிரச்சனையால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஜாஸ்மின்ரெகானா தனது பணம், நகையை கேட்டதால் ஆத்திரம் அடைந்த சிராஜ்தீன், ஜாஸ்மின் ரெகானாவை கொலை செய்துவிட்டாராம்.


இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஜாஸ்மின ரெகானா கொலை தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வந்துவிடும்; தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என சிராஜ்தீன் பயந்துள்ளார். இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்கின்றனர்.