IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாலியல் தொல்லையால் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை.!!

16

இந்தியாவின் மகராஸ்ரா மாநிலத்தில் பெண் ஒருவரால் பாலியல் தொல்லை வழங்கப்படுவதாக கூறி ஆண் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவரின் பாலியல் தொல்லை காரணமாக 38 வயதுடைய குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த மாநிலத்தின் பார்பானி நகரில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

மீட்கப்பட்ட சடலத்திற்கருகில் இருந்து கைபட எழுதிய கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

தன்னுடன் பணியாற்றும் பெண் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அவருடன் தகாத உறவிற்கு வற்புறுத்துவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்தால் பொலிஸில் தனக்கெதிராக பாலியல் முறைப்பாடு செய்யப் போவதாக பெண் மிரட்டியிருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனவே கடிதத்தை உயிரழந்தவரின் இறுதி வாக்குமூலமாக கருதி குறித்த பெண் மீது, தற்கொலைக்கு தூண்டுதல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.