IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தங்கம் விலை திடீர் சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

46

சில தினங்களாக ஏற்றத்திலேயே இருந்த தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கத்தின் விலையும் கிடு,கிடுவென உயர்ந்தது.
நேற்று உச்சக்கட்டமாக ஒரு சவரன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. சவரன் ரூ.31,168க்கும், கிராம் ரூ.3,896க்கும் விற்பனையானது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இச்சூழலில் தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, சவரனுக்கு ரூ. 424 விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.30744 ஆகவும், கிராமுக்கு ரூ.3843 ஆகவும் நிர்னயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1.20 காசு குறைந்து ரூ.51க்கு விற்பனையாகிறது.
கடந்த சில தினங்களாக கிடு, கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை இன்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.