IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இப்படி இருந்தால் மட்டுமே தான் ஓர் முதலாளி என்பார்களாம் ! ஓர் உண்மை சம்பவம்

0 43


முதலாளி என்பவர் தொழிலாளியின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நாம் அலுவலகத்தில் முதலாளியாக இருந்தால் நமக்கு கீழே வேலை செய்பவர்களை கவனிக்க வேண்டும். பின் அவர்களை பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியம்.


ஒரு முதலாளி இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கான உண்மை சம்பவம்:


நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை இரண்டு நாட்களுக்கு முன்னால் போலீசார் கைது செய்தனர். கடையின் முதலாளி, பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது.


பின்னர் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச முதலாளிக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவர் பேசியதை போலீசார் பதிவு செய்தனர்.


அந்த குற்றவாளியிடம் முதலாளி கேட்டது:


எனது கிளைகள் நிறைய இருக்கிறது. குறிப்பாக அங்கு மட்டும் வந்து திருட என்ன காரணம், அதே நேரத்தில் எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் நகை உள்ள இடத்திற்கு வர முடியும் என்பது எப்படி தெரியும், என்று கேட்டார்.


அதற்கு குற்றவாளி சொன்ன பதில், நானும் எனது மனைவியும் பத்து முறைக்கு மேல் இங்கு நகை வாங்க வந்துள்ளோம். அவள் நகையை பார்த்து கொண்டிருப்பாள். ஆனால் நான் கடையை கவனித்து கொண்டிருப்பேன். அதன் பின் பிளான் போட்டு உள்ளே வந்தோம் என்றான்.


இதை கேட்ட முதலாளி, குற்றவாளியிடம் சரி என் குழப்பம் தீர்ந்தது நன்றி என்றார்.


ஏன் சார் எனக்கு நன்றி சொல்றீங்க என்று குற்றவாளி கேட்ட போது? அவர் சொன்ன பதில் உண்மையிலே அனைவரையும் நெகிழ வைத்தது.


இல்லை எனக்கு திருடு போன நகையை பற்றி கவலை இல்லை. இன்சூரன்ஸ் செய்துள்ளேன். அதைவிட அதிகமாக சம்பாதிக்க என்னிடம் தைரியம் உள்ளது.


எனது கவலை எல்லாம் இவ்வளவு பெரிய கடையில் காவலாளிகள் இருக்கும் இடத்தில் ஓட்டை போட்டு உள்ளே வர உனக்கு தைரியம் எப்படி வந்தது. நிச்சயமாக கடையில் இருக்கும் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை குழப்பியது.


அதை விட எனது கவலை எல்லாம் எனது கடையில் வேலை பார்ப்பவன் திருடும் அளவிற்கு செல்கிறான் என்றால் என் மீது என்ன குறை இருக்கிறது. அதை நான் உடனே சரி செய்ய வேண்டும். அந்த ஊழியனின் பணத் தேவை எனக்கு ஏன் தெரியவில்லை.


அவர்களை நான் சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கவலையாக இருந்தேன். அதனால் தான் அதை தெளிவு படுத்த பல முயற்சிகள் செய்து உன்னை சந்தித்தேன் என்றார்.


இவர்களை போன்ற முதலாளிகள், மட்டும் இப்படி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.


தன்னுடைய தொழிலாளி மன நிறைவு தான் முக்கியம் அவனுக்கு அதை நான் சரியாக செய்தால் தான் நான் முதலாளி என்ற தகுதியை பெறுவேன் என்ற உயர்ந்த சிந்தனைகள் தான் இவர்களை போன்றவர்களை முதலாளிகலாக உயர்த்தி அழகு பார்க்கிறது.


#successful #owenership #way