IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மகாகவி பாரதியின் பிறந்தநாள் வாழ்த்து – தமிழில் பிரதமர் மோடி டுவிட்

Get real time updates directly on you device, subscribe now.


மனிதனின் அவதியை போக்கி, அதிகாரத்தை அளிக்க பாரதி கொண்டிருந்த பார்வையை எடுத்துக் காட்டி, மகாகவி பாரதியின் பிறந்த நாள் வாழ்த்தாக பிரதமர் மோடி தமிழில் டுவிட் பதிவிட்டிருந்தார்.

புரட்சிகரமான பாடல்களாலும், அற்புதமான கவிதைகளாலும் எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சுதந்திர போராட்ட காலங்களில், விடுதலை வேள்வியை தம் பாடல்களால் உருவாக்கி படரவிட்ட, தேசியக் கவியின் 138வது பிறந்த தினத்தை இன்று அனைவரும் கொண்டாடுகின்றனர்.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளில் இன்று தனது கருத்துக்களை பதிவு செய்து தேசிய கவிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திருவோம் என்று ஒருமுறை கூறினார்.
மனிதனின் அவதியை போக்கி, அதிகாரத்தை அளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது. – என்று பதிவிட்டிருந்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader