12.1 C
Munich
Monday, October 3, 2022

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 தேர்வில் வேலூர் ஆகாஷ் பைஜூஸ் மாணவி தேர்ச்சி

Must read

வேலூரைச் சேர்ந்த ஆகாஷ் பைஜூஸ் மாணவி ஸ்வாதிஸ்ரீ கூட்டு நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022வில் அகில இந்திய தரவரிசைப்பட்டியலில் 759வது இடம் பெற்று நிறுவனம் மற்றும் நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவி உலகின் கடினமான நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் ஐஐடி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற இரண்டு ஆண்டு வகுப்பறை திட்டத்தில் ஆகாஷ் பைஜூஸில் சேர்ந்தார். ஜேஇஇயில் சிறந்த சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில் அவர் நுழைந்ததற்குக் காரணம், கருத்துகளைப் புரிந்துகொள்வதில் அவர் எடுத்த முயற்சிகள் மற்றும்  கற்றல் அட்டவணையை அவர்கள் தீவிரமாகப் பின்பற்றியதே ஆகும்.

“கருத்துக்களை புரிந்து கொள்ளவும், கற்றல் அட்டவணையைப் பின்பற்றவும் எனக்கு உதவியதற்காக ஆகாஷ் பைஜூஸ் நிறுவனத்திற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஆனால், குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை நிறுவனத்தின் உள்ளடக்கம் மற்றும் பயிற்சி இல்லாமல் நான் புரிந்து கொண்டிருக்க மாட்டேன்” என்று வெற்றி பெற்ற மாணவி கூறினார்.

ஸ்வாதிஸ்ரீயை வாழ்த்திப் பேசிய ஆகாஷ் பைஜூஸ் நிர்வாக இயக்குநர்  ஆகாஷ் சவுத்ரி, “மாணவியின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 ஆம் ஆண்டு தேர்வில் நாடு முழுவதும் இருந்து 1,55,538 மாணவர்கள் பங்குபெற்றனர். இதில் மொத்தம் 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியின் மதிப்பெண் சதவீகிதமானது அவரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் ஆதரவைக் காட்டுகிறது. மாணவியின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article