IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

செல்போன் பேசுவதை தாய் கண்டித்ததால் 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை

5

சிவகிரியில் அடிக்கடி செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த, 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், சிவகிரி தென்மலை அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். முருகன் கடந்த 5 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டதால், அவரது தாயார் வேலை பார்த்து, மாணவியை படிக்க வைத்துள்ளார்.
அந்த மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் செல்போனை எடுத்துக்கொண்டு பேசி கொண்டே இருப்பாராம். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இருப்பினும் பேசுவதை நிறுத்தவில்லையாம். இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவில் அந்த மாணவி குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். அடிக்கடி போன் பேசுவதால் தான் மதிப்பெண் குறைந்ததாகவும், இதனால் போன் பேசுவதை நிறுத்தி விட்டு படி என அவரது தாயார் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டின் அறைக்குள் சென்று சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் விரைந்து வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பேசுவதை தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.