செஸ் ஆனந்த்தை துரத்தும் தனிமை! மேலும் 14 நாட்கள் நெருக்கடி

Get real time updates directly on you device, subscribe now.

உலகப்புகழ் பெற்ற செஸ் ஆனந்த் விஸ்வநாதன் தொடர்ந்து தனிமையில் இருக்கும் நெருக்கடி அவரை துரத்துகிறது.

செஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆனந்த் விஸ்வநாதன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா காரணமாக அந்த போட்டிகளும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. எனினும் உலகளாவிய ஊரடங்கு காரணமாக அனைத்து விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், 3 மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியிலேயே முடங்கிக் கிடந்தார்.

அரசாங்கம் நிர்பந்தம் செய்யும் முன்னரே, தாமாகவே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது விமான போக்குவரத்து ஓரளவு சீரடைந்துள்ள நிலையில், ஆனந்த் ஜெர்மனியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை பெங்களூரு வருகிறார்.

அரசாங்க அறிவுறுத்தலுக்கு இணங்க, பெங்களூருவில் 14 நாட்கள் அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார். அதன்பின்பு ஆனந்த் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader