IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

போராட்டம் பண்ண டெல்லிக்கு வாங்க! கனிமொழி எம்.பி. அழைப்பு!!

19


தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழர்கள் டெல்லிக்கு வர வேண்டும், என்று கனிமொழி எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தி பேசிய கனிமொழி இதனை தெரிவித்தார்.


மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்து மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கல்வி மேம்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்போது சமூக நீதியைச் சீர்குலைக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்தியாவை இந்துத்துவ நாடாக, இந்தி மொழி பேசும் நாடாக மாற்ற மத்திய அரசு விரும்பிகிறது. இது ஆபத்தானது. உலகிலேயே மிகச்சிறந்த கல்விக் கொள்கையைக் கொண்ட பின்லாந்து நாட்டில் கூட தேசிய தகுதி நுழைவுத் தேர்வுகள் கிடையாது, என்றார்.


மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கையை திமுக ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்காக தளபதி ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவின் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த கல்வித் திட்டத்துக்கு எதிராக தமிழ்கள் எழுப்பும் முழக்கம் டெல்லி வரை கேட்க வேண்டும். டெல்லி சென்றும் தமிழர்கள் போராட வேண்டும், என்று கனிமொழி எம்.பி. பேசினார்.