IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தவறு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை – டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

55

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
கடந்த 2019 செப்., 1ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியானது. அந்த தர வரிசைப்பட்டியலை ஆய்வு செய்த போது, முதல் 100 இடங்களை பிடித்தவர்கள், ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவர்களில் பெரும்பாலானோர் இடம் பெற்றது தெரியவந்துள்ளது. அதிலும், அந்த மையங்களில் தேர்வெழுதிய 19 பேர் முதலிடமும் பெற்றிருந்ததால், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே போல் 2017-18 ம் ஆண்டில் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 30க்கும் மேற்பட்டோர் 50 இடங்களுக்குள் வந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணையை டி.என்.பி.எஸ்.சி. தொடங்கியுள்ளது. விசாரணை குறித்து டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குரூப் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. அனைத்து ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தவறு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உண்மை தெரிய வரும் வரை தேர்வர்கள் பொறுமை காக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.யின் நேர்மையான செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,ஒரே மையத்தில் தேர்வு எழுதிய நிறைய பேர் தேர்வாகி உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.