IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நித்தியைப் போன்று ஸ்டாலின் தனிநாட்டில் முதல்வராகலாமே தவிர தமிழகத்தில் முடியாது – ஜெயக்குமார்

69


சர்ச்சைக்கு பெயர்போன நித்தியானந்தா தனி நாட்டை உருவாக்கியது போல் ஸ்டாலினும் தனிநாட்டை உருவாக்கி அங்கு முதல்வராகலாம். ஆனால் தமிழகத்தில் அது முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ராஜாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்போம், ஆதரிக்க வேண்டிய விஷயங்களை ஆதரிப்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.

ஆனால் ஒட்டுமொத்த குழப்பவாதியாக திமுக ஸ்டாலின் மற்றும் அவரது திமுக கட்சியும் உள்ளது. 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது திமுக தடை வாங்கியது. தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் அதை வரவேற்பதாக அறிவித்தார். தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றி விட்டு மீண்டும் தடை கேட்டு, நீதிமன்றம் சென்றுள்ளனர். இவ்வளவு குழப்பத்திற்கு காரணமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராகும் ஆசையை விட்டு சர்ச்சைக்கு பெயர்போன நித்தியானந்தாவைப் போன்று தனிநாடு வாங்கி சென்று அங்கு முதல்வராகலாமே தவிர தமிழகத்தில் அது முடியாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.
#MinisterJeyakumar #MKStalin #In4Net