IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மர்மம் குறித்து ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும் – செல்லூர் ராஜு

9


ஹிந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதாக தமிழகத்தில் ஹிந்தி திணிப்பிற்கு அனுமதிக்க முடியாது என்று கூறி போராட்டத்திற்கு தயாரான ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகிதத்தை சந்தித்த பிறகு ஹிந்தி போராட்டத்தை வாபஸ் வாங்கியது எதனால் என்ற மர்மத்தை ஸ்டாலின் தான் விளக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.


மதுரை பரவையில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையத்தை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். பின்பு அவர் பேசும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த பிறகு பின் வாபஸ் வாங்கியுள்ளார்.
அதெல்லாம் தர முடியாதுங்க! – செல்லூர் ராஜு தடாலடி


ஹிந்தி மொழி குறித்து காங்கிரஸ் கூட்டணியில் முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பேசும்போது, அமைதி காத்த ஸ்டாலின், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்ய முயல்கிறார்.


திமுக-வினர்களின் சொத்துக்களை மட்டும் பறிமுதல் செய்தால் மத்திய அரசுக்கே பட்ஜெட் போடலாம். 2ஜி உள்ளிட்ட ஊழல் புகார்கள் நடவடிக்கைக்கு பயந்து போராட்டத்திலிருந்து பின் வாங்குகிறார். அதுகுறித்த மர்மத்தை ஸ்டாலின் தான் விளக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
#SellurRaju #MKStalin #HindiLanguage #In4Net