IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் நவ.26இல் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம்

Get real time updates directly on you device, subscribe now.


தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. நவக்ரஹ தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த மகா சூலினி துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. இம்மாதத்திற்கான ஹோமம் வரும் நவ.26 (செவ்வாய்கிழமை) இரவு 7 மணி முதல் நடைபெறுகிறது. முன்னதாக 6.30 மணிக்கு சங்கல்பம் நடைபெறும்.


ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஸ்ரீமகா சூலினி துர்க்கா ஹோமத்தில் கலந்து கொண்டால் நவக்ரஹ தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து நிவர்த்தி ஏற்படும் என சூலினி தந்த்ர சாஸ்த்ரம் கூறுகிறது.


அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் அன்றைய தினம் பூமியில் மிக அபூர்வமான சக்திகள் கிடைக்கின்றது. ஆதலால் அன்று செய்யும் ஜபங்கள், ஹோமங்கள், பல ஆயிரம் மடங்கு பலன்களை கொடுக்கிறது என மந்த்ர சாஸ்திரங்கள் கூறுகின்றது. எனவே நாம் தொடர்ந்து அமாவாசை மகா சூலினி துர்க்கா ஹோமங்கள் கலந்து கொண்டு, மேன்மையடையலாம் என பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் இப்பீடத்தில் ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்தசி அன்றும் மாலை வேளையில் சிறப்பு அபிசேகம்,ஸஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மூல மந்த் அர்ச்சனையும் நடைபெறுகிறது.


இது தவிர கல்விக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவஹோமம், விவாக தடை நீங்க ஸ்ரீஸ்வயம்பரா பார்வதி ஹோமம், ஸந்தான பாக்யத்திற்கு ஸ்ரீஸந்தான கோபால ஹோமம், கடன் நிவர்த்தி மற்றும் வியாபார அபிவிருத்திக்காக ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், நோய்கள் நிவர்த்திக்காக மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம், எதிரி தொல்லைகள் மற்றும் கோர்ட் வழக்குகளில் இருந்து விடுபட ஸ்ரீமன்யு சூக்த ஹோமம்,ஸ்ரீசுதர்ஸன நரஸிம்ஹ ஹோமம், ஸ்ரீராஜகோபால மஹா ஹோமம்,ஜ்வாலா நரஸிம்ஹ, அகோர நரஸிம்ஹ, உக்ர நரஸிம்ஹ ஹோமங்கள் பக்தர்களின் ப்ராத்தனைகளுக்கு ஏற்ப நடைபெற்று வருவதாக பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.



#Srimakasulini #Durga #Lakshmi #Narasimha

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader