IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கன்னி டெஸ்டில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய இலங்கை வீரர்.!

46

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 303 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தென்னாபிரிக்க அணியானது தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


தென்னாபிரிக்கா அணி சார்பில் டூ ப்ளசிஸ் 90 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.


பந்து வீச்சில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் லசித் அம்புல்தெனிய 5 விக்கட்டுக்களை வீழ்த்தியதுடன், விஷ்வ பிரனாந்து 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.


முன்னதாக தனது முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 235 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


இதனைத் தொடர்ந்து 303 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.