IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் பிப்.23 இல் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம்

904

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூரில் (வடக்கு பேருந்து நிலையம் அருகில்) ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது.

நவக்ரஹ தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த மகா சூலினி துர்க்கா ஹோமம் நடத்தப்படுகிறது.

இம்மாதத்திற்கான ஹோமம் வரும் பிப்.23ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் நடைபெறுகிறது. முன்னதாக 6.30 மணிக்கு சங்கல்பம் நடைபெறும்.

Related Posts
1 of 2

ஒவ்வொரு அமாவாசைதினத்தன்றும் நடத்தப்படும் இந்த ஸ்ரீமகா சூலினி துர்க்கா ஹோமத்தில் கலந்து கொண்டால் நவக்ரஹ தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து நிவர்த்தி ஏற்படும் என சூலினி தந்த்ர சாஸ்த்ரம் கூறுகிறது.

மேலும் அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் அன்றைய தினம் பூமியில் மிக அபூர்வமான சக்திகள் கிடைக்கின்றது. ஆதலால் அன்று செய்யும் ஜபங்கள், ஹோமங்கள், பல ஆயிரம் மடங்கு பலன்களை கொடுக்கிறது என மந்த்ர சாஸ்திரங்கள் கூறுகின்றது.

எனவே தொடர்ந்து அமாவாசை மகா சூலினி துர்க்கா ஹோமங்கள் கலந்து கொள்பவர்கள் மேன்மையடையலாம் என பீடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.