IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி ஆலயத்தில் மாபெரும் மகா யாகப் பெருவிழா

Get real time updates directly on you device, subscribe now.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பஞ்சபூதேஸ்வரம், வேதியரேந்தல் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் சாக்த மடாலயத்தில் மாபெரும் மகா யாகப் பெருவிழா நடைபெற உள்ளது. ஸ்ரீ சஹஸ்ர சண்டீ மகா யக்ஞம் என்ற பெயரில் வரும் 25ம்தேதி முதல் 31ம் தேதி வரை இந்த யாகம் நடைபெறுகிறது. ஸ்ரீ வித்யா குல பூஷணம், ஸ்ரீவித்யா தந்திர ரத்னா ப்ரம்மஸ்ரீ, பி.வி.கணபதி சுப்ரமண்யம் சாஸ்திரிகள் மற்றும் குழுவினர் யாகத்தை நடத்துகிறார்கள்.


முதல் நாளான 25.07.19 அன்று மாலை கணபதி பூஜையுடன் விழா தொடங்குறது. அதனைத் தொடர்ந்து ஹோமம், அஷ்டமி சண்டீஹோமம், ஸ்ரீ சண்டீ தேவி கலச ஸ்தாபனம் பூஜைகள் நடைபெற உள்ளன. இரண்டாம் நாள் 26.07.19 காலை ஸ்ரீ கணபதி ஹோமம், கோ பூஜை, சண்டீ ஆவரண பூஜை, ஸப்த சதீ பாராயணம், ஸ்ரீ சாம்ராஜ்ய லட்சுமி ஹோமம், ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், ஸ்ரீ லெட்சுமி நாராயண ஹோமம், மாலை ஸ்ரீ தஷிண காளி ஹோமம், ஸ்ரீ பைரவ ஹோமம், இரவு தீபாராதனை நடக்கிறது. மூன்றாம் நாள் 27.07.19 ஸ்ரீ ருணமோசன கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ மகா ம்ருத்ஞ்ஜய ஹோமம், தீபாராதனை மாலை பூஜைகள், ஸ்ரீ சண்டீ பாராயணம் ஸ்ரீ சரப ருத்ர ஹோமம், இரவு பூர்ணாஹீதி நடக்கிறது.


நான்காம் நாள் 28.07.19 ஸ்ரீ ஸங்கடஹர கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், தீவாராதனை, ஸ்ரீ ராஜ மாதங்கி ஹோமம், ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம், தீபாராதனை நடைபெறுகிறது. ஐந்தாம் நாள் 29.07.19 ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், பூஜைகள், ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், பிற்பகல் வஸோர்த்தாரை, தீபாராதனை, ஸ்ரீ வனதுர்க்கா ஹோமம், தீபாராதனை நடக்கிறது. ஆறாம் நாள் 30.0719 ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம், காலை முதல் மாலை வரை ஸ்ரீ சஹஸ்ர சண்டீ ஹோமம்.


ஏழாம் நாள் 31.07.19 காலை ஸ்ரீ கணபதி ஹோமம் பூஜைகள், பராயணம், பிற்பகள் ஸ்ரீ தச மஹா வித்யா ஹோமம், ஸ்ரீ காளி, ஸ்ரீ தாரா, ஸ்ரீ வித்யா, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ திரிபுர பைரவி, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ கமலாத்னிகா, மாலை 5 மணிக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம், இரவு 8 மணிக்கு பூர்ணாஹீதி, கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம், ப்ரஸாதம் விநியோகம் வெகு விமரிசையாக நடக்கிறது.


இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் சாக்த மடாலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


விழா குறித்த மேலும் தகவலல்களுக்கு 9842858236 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

-அ.சுஸ்மிதா

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader