IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வெங்காயத்தை தாக்கும் திருகல் நோய்

Get real time updates directly on you device, subscribe now.


வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்களில் நோய் பாதிப்பு குறித்து கண்டறிந்து தடுத்திட வேண்டும். தற்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் வெங்காயத்தில் திருகல் நோய் அதிகளவில் தென்படுகிறது.


நோய் பாதித்த வயலில் செடிகளில் இலைகள் திருகியும், சுருண்டும், மஞ்சள், நிறத்துடன் காணப்படும். வெங்காயத் துண்டு நீண்டும், குமிழ்கள் சிறுத்தும் இருக்கும். அறுவடைக்கு முன்னரே செடிகள் காய்ந்து விடும்.


மழைக்காலத்தில் வெங்காயத்தில் திருகல் நோய் அதிகளவில் கணப்படும். காற்றில் அதிக ஈரப்பதம் மற்ரும் வெப்பநிலை 23 – 30 டிகிரி நிலவும் போது நோயின் தீவிரம் அதிகரிக்கும்.


மேலாண்மை முறை :


பயிற் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். செடியின் அடிப்பகுதியும் நனையுமாறு ஒரு லிட்டர் தண்ணீரில் காப்பர் ஆக்சிகுளோரைடு 2.5 – 3 கிராம் என்ற அளவில் கைத் தெளிப்பானை பயன்படுத்தி தெளிக்கலாம்.


மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோவிட் , பைட்டோ வெட், ஸ்டிக்கால் அக்ரோவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.


#Spiral #disease #onions

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader