IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கீரை பட்டர் மசாலா

119


தேவையான பொருட்கள்:


வெண்ணெய் – 50கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 4, பசலி கீரை – 2 கட்டு, இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, முந்திரி பருப்பு – 50கிராம், மஞ்சள் தூள் – சிறிதளவு, கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – சிறிதளவு, மளகாய் தூள் – சிறிது, வெந்தய இலை – சிறிதளவு, கெட்டியான க்ரீம் – 1 கப், தாளிக்க – பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிரகம், சிறிதளவு.


இப்படித்தான் செய்யனும்:

  • பசலை கீரையை தண்ணீரில் லேசாக வேக வைத்து, மையாக அரைத்துக் கொள்ளவும்.

  • வெங்காயத்தையு, தக்காளியையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  • பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும். பட்டை, கிராம்பு, சீரகம், மற்றும், ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காய விழுது, தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.

  • நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  • மசாலாத் தூள் சேர்த்து கிளறவும்.

  • அதனுடன் கீரை விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  • கொதித்ததும் காய்ந்த வெந்தய இலை கெட்டியான க்ரீம், சிறிது வெண்ணெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

  • ரொட்டி, சப்பாத்தி போன்றவைகளுக்கு கீரை பட்டர் மசாலா நன்றாக இருக்கும்.

#Spinach #Butter #Spice