IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கீரை வகைகளும் அதன் பயன்களும்

Spinach

Get real time updates directly on you device, subscribe now.


தினமும் ஒவ்வொரு வகையான கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது அவசியம்.


கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. கீரைகளில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்து இங்கே காணலாம்.

  • அகத்திக்கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.
  • காசினிக்கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். மேலும் உடல் வெப்பத்தை தணிக்கும்.
  • பசலைக்கீரை தசைகளை பலமடையச் செய்யும்.
  • கொடி பசலைக்கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
  • மஞ்சள் கரிசலை கல்லீரலை பலமாக்கும் காமாலையை விலக்கும்.
  • குப்பைக் கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்த வைக்கும்.
  • அரைக்கீரை ஆண்மையை பெருக்கும். உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது.
  • புளியங்கீரை சோகையை விலக்கும். கண்நோய் சரியாக்கும்.
  • பிண்ணாருக்கு கீரை வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
  • பரட்டைக் கீரை பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
  • பொன்னாங்கன்னி கீரை உடல் அழகையும் கண் ஒளியையும் அதிகரிக்கும்.
  • சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
  • வெள்ளை கரிசலைக்கீரை ரத்தசோகையை நீக்கும்.
  • முருங்கைக்கீரை நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
  • வல்லாரை கீரை மூளைக்கு பலம் தரும்.
  • முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
  • புண்ணக்கீரை சிரங்கும், சீதளமும், விலகும்.
  • புதினாக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
  • நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.

#Spinach #benifite

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader