IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோவின் கோரப்பிடியில் ஸ்பெயின் – ஒரே நாளில் 500 பேர் பலி

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவைத் தொடர்ந்து கொரனோவின் பாதிப்பு இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்பெயினில் 514 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 2,696 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 40,000’தை நெருங்கியுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்து 39,673 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 23.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா இறப்பில் ஐரோப்பிய நாடான இத்தாலி முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொடங்கிய சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், விரைவில் சீனாவை முந்திவிடும் என ஸ்பெயின் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader