IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விண்வெளியில் 30000 செயற்கைக் கோள்கள் ஏவ திட்டம்

0 189

Tesla நிறுவனமானது அதிநவீன கார் வடிவமைப்பு மற்றும் Space X திட்டத்தின் கீழாக செயற்கைக் கோள்கள் போன்றவற்றினை கவனித்து வருகின்றது. இந்நிறுவனத்தின் தலைவர் Elon Musk விண்வெளியில் சுமார் 30000 செயற்கைக் கோள்களை ஏவ முடிவு செய்துள்ளார்.

இதன் ஏற்பாடு அனைத்தும் மிக வேகமான இணைய இணைப்பிணை வழங்குவதற்காகும். ஏற்கனவே 12000 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது 30000 செயற்கைக் கோள்கள் ஏவ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 12000 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தப்படுவதற்கு ஏற்கனவே அமெரிக்காவின் federal Communications Commission (FCC) அமைப்பிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.