தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் !

Get real time updates directly on you device, subscribe now.

தென்னிந்திய சினிமா பிரபலங்களுடைய திருமண தேதிகள் பத்தியும் அவங்களோட ஜோடிகள் பத்தியும் தான் இந்த கட்டுரையில தெரிந்துகொள்ள போகிறோம்.

அஜித் குமார்

காதல் கோட்டை படத்துல நடிச்ச அஜித், அதே படத்துல வர்ற ஹீராவ காதலிச்சாரு.
ஆனா, இந்த காதல் கை கூடல. அதற்கு பின்பு, கொஞ்சம் வருசம் கழிச்சு அமர்க்களம் படத்துல நடிகை ஷாலினியை காதலிச்சாரு.

இந்த காதல், கல்யாணமா முடிஞ்சது. இவங்களுடைய திருமண தேதி
24 ஏப்ரல் 2000.

சூர்யா

தமிழ் சினிமாவுல சூர்யா – ஜோதிகா காதல் ரொம்ப அதிகமா பேசப்பட்டுச்சு.
வாலி படத்துல அறிமுகமான ஜோதிகா, மும்பை பொண்ணு. குறிப்பா சொல்லணும்னா நக்மாவுடைய தங்கை.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துல தான் இந்த ஜோடி ஒன்னு சேர்ந்து நடிச்சாங்க.
அதுக்கு அப்புறம் 7 படங்கள் ஒன்னு சேர்ந்தாங்க. இவங்க ரெண்டு பேரும் ஜோடியா நடிச்ச கடைசியா ரிலிசான படம் சில்லுனு ஒரு காதல்.

அதற்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இவங்களுடைய
திருமண தேதி 11 செப்டம்பர் 2006

தனுஷ்

காதல் கொண்டேன் படம் நடிச்சதற்கு அப்புறம், ரஜினி தேடி வந்து கை கொடுத்தாராம் தனுஷ்கிட்ட.

அதுக்கு அப்புறம் தன் மூத்த பொண்ணு ஐஸ்வர்யாவ திருமணம் முடிச்சி கொடுத்தாரு.

இந்த ஜோடி காதலிக்கல. ஆனா, பெற்றோர் பாத்து திருணம் பேசி கல்யாணம் பண்ணி வச்சாங்க.

இவங்களுடைய திருமண தேதி 18 நவம்பர் 2004

விஜய்

இன்னைக்கு தமிழ் சினிமாவுல ஒரு அசைக்க முடியாத ஆளுமையா இருக்கிற தளபதி விஜய், அன்னைக்கு காதல் தளபதி தான்.

இவர் நடிச்ச பெரும்பாலான படங்கள் காதல பத்தியும் காதலர்கள பத்திய கண்டென்ட் களாத்தான் இருக்கும்.

ஆனா, விஜய் காதலிச்சு திருமணம் பண்ணிக்கல. தன்னோட நீண்ட நாள் ரசிகையான சங்கீதாவ பெற்றோர்கள் பேசுன படி கல்யாணம் பண்ணிக்கிட்டாறு.

இவர்களுடைய திருமண தேதி 25 ஆகஸ்ட் 1999

சிவகார்த்திகேயன்

விஜய் டிவி ல தொடங்குன தொலைக்காட்சி பயணம் இன்னைக்கு சினிமாவுல தொடருது.

பெரிய ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்குற அளவுக்கு தமிழ் சினிமாவுல முன்னணி ஹீரோவா வளர்ந்து நிக்கிறாரு சிவா.

இவர் தன்னுடைய உறவுக்கார பெண்ணான ஆர்த்தி தாச திருமணம் பண்ணிக்கிட்டாறு.

இவர்களுடைய திருமண தேதி 27 ஆகஸ்ட் 2010

ஆர்யா

தமிழ் சினிமாவுல நிறைய காதல் மன்னன்கள் இருக்காங்க. அதுல முக்கியமானவரு தான் ஆர்யா.

எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு ஒரு நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில நடத்துன ஆர்யா, நடிகை சாயிசாவ காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டாறு.

இவர்களுடைய திருமணம தேதி 10 மார்ச் 2019

ஜெயம் ரவி

எடிட்டர் மோகனோட பையன், இயக்குனர் ராஜாவோட தம்பிங்கிற தாண்டி இன்னைக்கு தன்னோட சொந்த பெயரையே அடையாள மாத்திக்கிட்ட திறமையான நடிகர் தான் ஜெயம் ரவி.

இவர், ஆர்த்திக்கிற பெண்ண திருமணம் பண்ணிக்கிட்டாரு.

இவங்களுடைய திருமண தேதி 4 ஜுன் 2009

மகேஷ் பாபு

தெலுங்கு படங்களோட இளவரசன் தான் மகேஷ் பாபு. கோலிவுட்டுக்கு விஜய் எப்படியோ அப்படித்தான் டோலிவுட்டுக்கு மகேஷ் பாபு.

இவரு நர்மதாங்கிற நடிகையை திருமணம் பண்ணிக்கிட்டாரு. நர்மதா விஜய் நடிச்ச ப்ரண்ட்ஸ் படத்துல நடிக்க ஒப்பந்தமாகி அடுத்து விலகிட்டாங்க.

இவங்களுடைய திருமண தேதி 10 பிப்ரவரி 2005

அக்கினேனி நாக சைதன்யா

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவோட பையன் தான் நாக சைதன்யா. இவருக்குன்னு ஒரு மார்க்கெட் டோலிவுட் ல இருக்கு.

இவரு நம்ம பல்லாவரம் பொண்ணு, தமிழ் சினிமாவோட குயின், நடிப்பு அரக்கி சமந்தாவ திருமணம் பண்ணிக்கிட்டாறு.

இவர்களுடைய திருமண தேதி 7 அக்டோபர் 2017

பஹத் பாசில்

விஜய் – சாலினி நடிச்ச காதலுக்கு மரியாதை படத்த டைரெக்சன் பண்ண பாசிலோட பையன் தான் இவரு.

மலையாள சினிமாவுல இளைஞர் பட்டாளத்துக்கு ஹீரோ இவர் தான்.
இவர், நடிகை நஸ்ரியா நசீம காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டாறு.

இவர்களுடைய திருமண தேதி 21 ஆகஸ்ட் 2014

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More