சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா விட்டுக்கொடுத்த தியாகங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

சமீபத்தில் வெளியான படங்களில் மிகவும் பரவலாக பேசப்படும் படங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரை போற்று. இந்தப்படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால், தற்போது பேசப்படுவதை காட்டிலும் பலமடங்கு பேசப்பட்டிருக்கும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், முகநூல், இன்ஸ்டா என எங்கு பார்த்தாலும் சூர்யா தான். விமான பயண சீட்டிற்காக போதுமான பணம் திரட்டி வருவதற்குள் அப்பா இறந்துவிடுகிறார்.

இந்த சம்பவத்தால், சாமானியனும் பறக்கும் அளவிற்கு விமான பயண சீட்டு இலகுவானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்து, விமான கம்பெனி தொடங்க பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் மோதும் நேர்மையான அதேநேரம் எதற்கெடுத்தாலும் கோவப்படும் இளைஞனின் உண்மை கதை.

இதைத்தாண்டி படத்தில் பல பழைய விஷயங்களை உடைத்தெறிந்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. காலம்காலமாக மாப்பிள்ளை தான் பெண் பார்க்க போவார்கள். ஆனால் இந்தப்படத்தில் அப்படியே தலைகீழாக உள்ளது.

அதேபோல், கல்யாணம் உறுதியானால் தான் கல்யாண வீட்டில் கை நனைப்பது காலம்காலமாக உள்ள பழக்கவழக்கம். படத்தில் இது போன்ற நிறைய பழமைகள் உடைத்தெறியபட்டுள்ளது.

அதே போல் சினிமா என்றாலே பல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அந்தவகையில், ஹீரோ என்றாலே பார்க்க வெயிட்டாக இருக்கும் பத்து பதினைந்துபேரை ஒரே குத்தில் பறக்கவிடுவார். அதோடு சம்பந்தமே இல்லாத சில பஞ்ச் டயலாக் எல்லாம் இடம்பெற்றிருக்கும். அதெல்லாம் இருந்தால் தான் படம் ஹிட் கொடுக்கும், அதேநேரம் ஹீரோவுக்கும் மரியாதை. ஆனால் இங்கு இயக்குனர், படத்தில் பழமையை மட்டும் உடைக்கவில்லை.

சினிமாவில் உள்ள இதுபோன்ற சினிமேட்டிக் விஷயங்களையும் உடைத்துள்ளார் இயக்குனர். சூர்யா போன்ற முன்னணி ஹீரோவும் கமர்ஷியல் படம், சண்டையெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அடம்பிடிக்காமல், இனிவரும்காலம் நெடுமாறன் கதாபாத்திரத்தை பேசும்படி நடித்து அசத்திவிட்டார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More